திருச்சி வாக்கு எண்ணும் மையத்தில் கேமரா இயங்கவில்லை, விரைவாய் செயல்பட்ட ஏஜெண்டுகள் !

0
1

திருச்சி ஸ்ரீரங்கம், திருவரம்பூர், மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கு பதிவு மையத்தில் அரசியல் கட்சியின் ஏஜென்டுகள், காவல்துறையினர், துணை ராணுவ படையினர், 12 சிசிடிவி கேமரா என்று கண்காணிப்பு வளையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா இயங்கவில்லை, இதனால் அரசியல் கட்சியின் ஏஜென்டுகள் பதற்றம் அடைந்தனர்.

2

உடனடியாக திமுகவைச் சேர்ந்த ஏஜென்டுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆர்டிஓ விற்கு தகவலை தெரியப்படுத்தினர். அங்கு உடனடியாக வந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ஒயர் பழுது அடைந்து இருப்பதாகக் கூறி ஒயரை சரி செய்தனர்.

இதன் காரணமாகும் சிறிது நேரம் வாக்கு எண்ணும் மையத்தில் பதற்றம் ஏற்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.