சொத்துப் பிரச்சினையில் தாயை கொன்ற மகன் !

0
1

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடி அருகே உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, இவரது கணவர் செல்லதுரை இறந்து விட்ட நிலையில் தனது இரண்டு மகன்களுக்கும் சொத்துக்களைப் பிரித்துக் தந்துள்ளார் சரஸ்வதி.

சரஸ்வதி சொத்துக்களை பிரித்து தந்ததை மூத்த மகன் தர்மராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை, இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சொத்து பிரிப்பதில் மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மகன் தர்மராஜ், தாய் சரஸ்வதியை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து கல்லக்குடி போலீசார் தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.