அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

0
“ஆல்போல் தழைத்து அருகு போல் வேறோடி”
என்பார்கள் நம் முன்னோர்கள்.
ஆலமரம் அதன் வேர்கள் பலமிழப்பினும், அதன் விழுதுகள் அதனைத்தாங்கிப்பிடித்து வாழ வைக்கும்.
அதுபோல் அருகம்புல் வறட்சி காலங்களிலும் தனது வேர்களை பூமிக்குள் செலுத்தி எப்படியாவது உயிர் பிழைத்துக்கொள்ளும்.. அதாவது வெளியில் பார்க்க சிறு செடி போல் தோன்றினாலும் அதன் வேர் பூமிக்கடியில் ஆழமாக பதிந்து கொள்ளும்.
அதனால்தான் நம் முன்னோர்கள் பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு என கண்டறிந்து நம்மிடம் விட்டுச்சென்றுள்ளனர்.
இது இந்த கோடை காலத்திற்கு மிகவும் நல்லது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
அருகம்புல் சாறு எப்படி தயாரிப்பது

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்து, மிக்சியிலிட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக்கொண்டு, பின்பு இதனை நன்கு வடிகட்டி இதனுடன்  தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும். பருகிய பின் அரை மணி  நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.

அருகம்புல் சாற்றில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகபடியான அமிலத்தன்மையை நீக்கி காரத்தன்மையை உருவாக்குகிறது.

அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிரது.

சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் 15 நன்மைகளை பார்ப்போம்.

நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க உதவும்..

இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

வயிற்றுப் புண் குணமாகும்.

இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்கும்.

புற்று நோய்க்கு நல்ல மருந்து.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை இளைக்க உதவும்.

இரவில் நல்ல தூக்கம் வரும்.

பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

மூட்டு வலி நீங்கும்.

கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

நம் உடம்பை தினமும் ரீப்ரஸ் செய்தது போலிருக்கும். புத்துணர்ச்சியாக இருக்கும்.

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.