திருச்சி வாக்கு எண்ணும் மையத்தில் லேப்டாப்புடன் நின்ற வாகனத்தால் பரபரப்பு !

திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள ஜமால் முகமது கல்லூரியில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று நின்றுள்ளது.
மேலும் அந்த வாகனத்தில் லேப்டாப் மற்றும் ஓயர்கள் போன்றவை இருந்துள்ளது, இதைப்பார்த்த திமுக முகவர்கள் வாகனம் குறித்து காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது மட்டுமல்லாது கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த இனிகோ இருதயராஜ், சந்தேகத்திற்கிடமாக நின்ற வாகனம் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
