மாஸ்க் அணியாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் கைது !

0

திருச்சி வயலூர் ரோடு அருகே காவல்துறையினர் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த உய்யகொண்டன் திருமலை பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் மாஸ்க் அணிய வில்லை என்று தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

சந்தா 2

இதனால் காவல்துறையினருக்கும் சிவாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு நீண்ட நேரம் ஆகியும் காவல்துறையினர் அவரை அனுப்பாததால், மீண்டும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிவா தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் கீதா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.