புராதன சின்னமாக ஸ்ரீரங்கம் கோயிலை அறிவிக்க கோரிக்கை !

0

திருச்சி மாவட்டம் நலப்பணி நிதிக்குழு உறுப்பினர் மருத்துவர் எம்.ஏ.அலீம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ; உலக புராதன சின்னங்களின் நாளாக நேற்றைய (ஏப்ரல் 18 )தினம் கொண்டாடப்பட்டது.

food

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மிகவும் பழமையான தொன்மையான கோவில், மேலும் ஸ்ரீரங்கம் கோயிலை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு யுனெஸ்கோ ஆய்வு நடத்தி பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்து இன்று வரை ஸ்ரீரங்கம் கோயில் புராதன சின்னமாக அறிவிக்கப்படவில்லை, எனவே உலக புராதன சின்னமாக ஸ்ரீரங்கம் கோயிலை அறிவிக்க தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.