கொரோனா பரவல்; பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை !

0

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிளஸ் 2 மாணவர்கள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மேலும் செய்முறைத் தேர்வில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

சந்தா 2

மேலும் ஹால் டிக்கெட் பெறும் நாளன்று மாணவர்களை வரவைத்து வழங்க வேண்டும் என்றும், மொழிப் பாடங்கள் தேர்வு தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்த பள்ளிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் நாளை ஏப்ரல் 19 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வேலை நாளாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.