Covid op- யில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

0

Covid op- யில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளையினர்

பெயர் விலாசம் தெரியாத சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் திருச்சிராப்பள்ளி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கோவிட் (OP) புறநோயாளி பிரிவு முன்பு 29-3-2021 ஆம் தேதி 12-30 மணிக்கு மயங்கிய நிலையில் மதியழகன் என்பவர் மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி 16-4-2021 ஆம் தேதி 6-35 மணிக்கு இறந்து மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

food

மேற்படி இறந்தவரின் புகைப்படத்தை காட்டி இறந்த நபரை பற்றி விசாரிக்க எந்தவிதமான முகாந்திரமும் கிடைக்க வில்லை மேற்படி இறந்த நபரை பற்றி விசாரிக்க இவர் நீண்ட நாட்களாக மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை பகுதியில் இலவசமாக கொடுத்த அன்னதான உணவுகளை உண்டு ஜீவனம் செய்து வந்துள்ளதாக தெரியவருகிறது மேற்படி இறந்தவரின் இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என விசாரணையில் தெரிய வருகிறது.

எனவே இறந்தவரின் பிரேதத்தை நல்லடக்கம் செய்ய வேண்டுமென அரசு மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாரிடம் தகவல் கூற வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் சிறப்பு உதவியாளர் ஆரோக்கியதாஸ் உடன் சவக்கிடங்கில் இருந்து பெயர் விலாசம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் பிரேதத்தை பெற்று திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தை குழிமிக்கரை மயானத்தில் 17-4-2021 நல்லடக்கம் செய்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.