உள்ளூர் ‘டிவி’ சேனலில் புதுப்படம், ஆபாச பாடல்கள் ; நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் !

0

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது தனியார் கேபிள் சேனல்களுக்கு தீர்வு என்று அரசு கேபிள் சேனல்களில் ஏற்படுத்தினார். பிறகு மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் அரசு கேபிள் விரிவுபடுத்தப்பட்டது. அரசு கேபிள்களில் கட்டணம் குறைவு, அரசின் நேரடிப் பார்வையில் செயல்படும் என்ற பல்வேறு திட்டங்களை கூறி அரசு கேபிள் தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தது. இதன் காரணமாக ஆரம்ப காலத்தில் மக்கள் பெருமளவில் அரசு கேபிள்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு இணையாகவும் கூடுதலாகவும் அரசு கேபிள் களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு கேபிள்களில் ஒளிபரப்பப்படும் உள்ளூர் சேனல்கள் சில தங்கள் சில்மிஷ வேலைகளை ஒளிபரப்பி வருகின்றன என்ற குற்றச்சாட்டு கரூர் மாவட்டத்தில் எழத் தொடங்கி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் அரசு கேபிள் உள்ளூர், ‘டிவி’ சேனலில் புதிய திரைப்படம், ஆபாச பாடல்கள் வெளியிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் ‘டிவி’யில், 10 உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த சேனல்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக, உரிமம் பெற்ற படங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால், இரவு,10:00 மணிக்கு மேல், புதுப்புது படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

food

தற்போது, கொரோனா பரவல் காரணமாக திரையரங்கங்களில் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல், ‘ஓடிடி’ முறையில் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நடிகை த்ரிஷா நடித்த, ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் நேற்று முன்தினம் காலை வெளியானது.

இந்த படத்தை அன்று இரவு, உள்ளூர் ‘டிவி’ சேனலில், ஓளிபரப்பி இருக்கின்றன.
இது மட்டுமல்லாது மேலும் உரிமம் பெறாமல் படங்களை ஒளிபரப்பு செய்யும் போது, வீடியோ பைரசி தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரிவு திருச்சியில் செயல்பட்டு வருவதால், இங்குள்ள உள்ளூர், ‘டிவி’ சேனல்களுக்கு வசதியாக போய் விட்டது.

மேலும், இரவு, 12.00 மணிக்கு மேல், பெரும்பாலான உள்ளூர் சேனல்களில், மிகவும் கவர்ச்சியான பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அரசியில் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளூர் சேனல்கள் செயல்படுவதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். என்று குற்றச்சாட்டு கரூர் முழுக்க இன்று பேசப்பட்டு வருகிறது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.