நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் வாக்குவாதம் ; கிராப்பட்டியில் பரபரப்பு !

0

மதுரை மெயின் ரோடு புறவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கியிருக்கிறது. இதற்காக திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறை முன்னிலையில் முற்பட்டனர்.

அப்போது பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் பலரும் வந்து திடீரென்று ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் எங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பதாக குற்றம்சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.