பள்ளியில் பணியாற்றுபவர்களுக்கு இன்றும் நாளையும் தடுப்பூசி திருவிழா !

0

திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

food

பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் மாணவர்களோடு நேரடி தொடர்பில் இருப்பதால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் மற்றும் மணப்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லால்குடி எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஏப்ரல் 16, 17 இன்றும் நாளையும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.