வைகை எக்ஸ்பிரஸை ஜப்தி செய்ய திருச்சி நீதிமன்றம் உத்தரவு !

0
1

2003ம் ஆண்டு சென்னையிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த வைகை எக்ஸ்ப்ரஸில் தஞ்சாவூரை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல் பயணித்தார். இப்போது விக்ரவாண்டி ஆளில்ல ரயில்வே கேட் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ரயில் டிராக்டர் மீது மோதியதில் பலர் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேலு 50 சதவீதம் நிரந்தரமாக பாதிப்படைந்தார். இதனால் நிரந்தர மாற்றுத்திறனாளி ஆக்கப்பட்ட பழனிவேல் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம் டிராக்டர் ஓட்டுனர் மீது குற்றம்சாட்டி வழக்கை தள்ளுபடி செய்தது. மீண்டும் இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பழனிவேல்.

வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் இரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் 50% இழப்பீடை மட்டும் வழங்கிவிட்டு பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்தது.

2

இழப்பீடு வழங்க காலதாமதம் ஏற்படுவதை எதிர்த்து மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் திருச்சி கூடுதல் நீதிமன்றம் மூன்றாவது அமர்வில் வழக்கு தொடர்ந்தார் பழனிவேல். வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் இரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

ரயிலை ஜப்தி செய்ய நீதிபதி அளித்துள்ள உத்தரவு இந்திய நீதித்துறை வரலாற்றில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.