கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த நாடக கலைஞர்கள் கோரிக்கை

0

கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த நாடக கலைஞர்கள் கோரிக்கை

சிவன் பார்வதி வேடத்தில் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு

food

தமிழ்நாடு நாடக நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் சிவன் பார்வதி முருகன் வேடத்தில் சென்று மனு அளித்தனர். மனுவில் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல சங்கத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் சுமார் 3000 நபர்களும், பதிவு செய்யாத கலைஞர்கள் சுமார் 12000 நபர்களும் மாற்று ஊடக கலைஞர்கள் சுமார் 100 நபர்களும் தெருக்கூத்து கலைஞர்கள் சுமார் 600 நபர்களும் குடும்பத்துடன் திருச்சி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள். கொரொனா பெருந்தொற்று காலத்தில் எவ்வித கலைநிகழ்ச்சியும் இல்லாமல் வாழ்வாதாரம் பாதித்து வருகின்றோம்.

எனவே நாடக கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டும் விதமாக கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவேண்டும். வீதி நாடகக் கலைஞர்களுக்கு அனைத்து ஊராட்சிகளிலும் கொரொனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தவும் கொரொனா கால நிதி உதவியை அரசு அறிவித்த ரூபாய் 2000 பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் 50 விழுக்காடு அனுமதி அளித்துள்ள அரசு கருணையோடு நாடகக் கலைஞர்களுக்கும் மாலை 6 முதல் 10 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு நாடக நாட்டுப்புறக் கலைஞர்கள் நல சங்க தலைவர் கலைமாமணி மங்கலம் நடராஜன் திருச்சி புறநகர் நாடக நடிகர் சங்க சிங்காரவேலன் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் திருச்சி மண்டல மாற்று ஊடகமை ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.