வாடகை கேட்டு கண்ணாடி உடைத்த உரிமையாளர் கைது !

0

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே முத்துச்செல்வன் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கடைக்கு கொரோனா ஊரடங்கு தொடக்கத்திலிருந்தே வாடகை செலுத்தவில்லை, இதனால் ஒரு வருடமாக வாடகை பாக்கி உள்ளதாக கூறி இடத்தின் உரிமையாளர் மேக்ஸ் கீரண் வாடகை வசூலிக்க வந்திருக்கிறார்.

food

இந்த நிலையில் தமிழ்ச்செல்வனுக்கும், கீரணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட மேக்ஸ் கீரண் ஆத்திரமடைந்து சலூன் கடையின் முன் பகுதியில் இருந்த கண்ணாடி அடித்து உதைத்துள்ளார்.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இடத்தின் உரிமையாளர் மேக்ஸ் கிரனை கண்டோன்மெண்ட் காவல்துறையினர் கைது செய்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.