திருச்சி பாலக்கரை பூந்தோட்டத்தில் 3 நாட்கள் இலவச மருத்துவ முகாம்..!

0

திருச்சி பாலக்கரை பூந்தோட்டத்தில் 3 நாட்கள் இலவச மருத்துவ முகாம்..!

திருச்சி மாநகராட்சியில் காஜாபேட்டை, கீழபுதூர், சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகள் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் பெருமளவு வசிக்கும் இடமாகும்.
உடல்நலக் குறைவினால் பாதிக்கப்படும் இப்பகுதியில் மக்களும் உயர்தர மருத்துவம் பெற, சங்கிலி யாண்டபுரத்தில் கவி பர்னிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சந்திரபாபு, தன் மகள் சுஜீத்தாவை எம்.டி. படிக்க வைத்து, காஜாபேட்டை, பூந்தோட்டம் பகுதியில் கவி நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையை தொடங்கி தன் கனவை நனவாக்கி வருகிறார்.

தந்தைக்கு மகள் சளைத்தவரல்ல என்று கூறுமளவிற்கு அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் வேர்ஹவுஸிலிருந்து சங்கிலியாண்டபுரம் செல்லும் சாலையில் பூந்தோட்டம், புனித மோட்சராகினி மாதா கோவில் எதிரில் உள்ள கவி நர்ஸிங் ஹோமில் வருகிற 18ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளார் மருத்துவர் சுஜீத்தா. இது குறித்து மருத்துவர் சுஜீத்தா சந்திரபாபுவை சந்தித்து பேசினோம்.

மருத்துவர் சுஜீத்தா சந்திரபாபு
மருத்துவர் சுஜீத்தா சந்திரபாபு

அப்போது அவர், “மருத்துவம் என்பது என்னை பொறுத்தவரை சேவையே. அதையே என் தந்தை எனக்கு கற்பித்திருக்கிறார். என் தந்தையின் விருப்பம் எளிய மக்களுக்கான உயர் தர மருத்துவத்தை உறுதிச் செய்வது தான். அதே போல் தற்போது குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவத்தை அளித்து வருகிறேன். இருப்பினும் இலவச மருத்துவம் என்பதே என் நோக்கம். கவி மருத்துவமனையில் பணியாற்றுவது மட்டுமின்றி பூந்தோட்டம் பகுதியில் கவி நர்சிங் ஹோம் தொடங்கி மருத்துவ பணி செய்து வருகிறேன்.

இதே பகுதியில் நானும் பிறந்து வளர்ந்தவள் என்பதால் இப்பகுதி மக்களின் ஏழ்மை நிலை எனக்கு நன்றாகவே தெரியும். பலரிடமும் எனக்கு அறிமுகம் உள்ளதால், மருத்துவ பரிசோதனைக்கு வருவோர் பலரும் என்னை அவர்கள் வீட்டில் ஒருவராகவே எண்ணிக் கொள்கின்றனர்.

இப்பகுதி மக்கள் எம்.டி படித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றால் தில்லைநகர், சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் என மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். தற்போது அவர்கள் பகுதியிலேயே நாங்கள் நர்சிங் ஹோம் தொடங்கி இருப்பது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன். அதனால் இப்பகுதியில் இலவச மருத்துவ முகாமை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் தற்போது கொரானாவின் இரண்டாவது அலை பரவும் காரணத்தினால் தினமும் 25 பேருக்கு என 3 நாட்களுக்கு முற்றிலும் இலவசமாக மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்க உள்ளோம்.

வருகிற 18, 19, 20ம் தேதி என மூன்று நாட்களும், காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடத்த திட்டமிட்டுள்ளேன். காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை சாப்பிடாமல். வெறும் வயிற்றுடன் இரத்த மாதிரி எடுத்தும், காலை உணவிற்குப் பின் மீண்டும் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை இரண்டாம் முறை இரத்த மாதிரி எடுத்தும் சர்க்கரை அளவை கண்டறிந்து சொல்ல இருக்கிறோம். அனைத்தும் எவ்வித கட்டணமின்றி செய்கிறோம். இப்பகுதி மக்கள் இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார் மருத்துவர் சுஜீத்தா.

முன்பதிவு அவசியம்
இலவச மருத்துவ பரிசோதனைக்கு 63857 20097, 90038 27040 என்ற எண்களை தொடர்பு கொண்டு அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும்.

 

இந்த முகாமில் தீராத வயிற்றுவலி பிரச்சினை, நீரழிவு நோய்க்கான மருத்துவ ஆலோசனை, நீரழிவு கால் புண்களுக்கான சிகிச்சை, பெண்கள் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள், பொது மருத்துவம் மற்றும் ஆலோசனைகள், ஆஸ்துமா, நெஞ்சு வலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கான முதல் கட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

மேலும் முகாமில் இரத்த அழுத்த பரிசோத னை, சர்க்கரை அளவைக் கண்டறிதல் (2 முறை), ஹீமோக்ளோபின் பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனை, நீமீக்ஷீணீtவீஸீ பரிசோதனை ரத்தத்தில் உப்பின் அளவு, தேவைப்படுவோர்க்கு இசிஜி பரிசோதனை, உடல் எடை பரிசோதனை என அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.