ஏன் அடிக்கடி மின்வெட்டு ; மணச்சநல்லூர் மக்கள் கேள்வி ?

திருச்சி மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு நாட்களாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும், மேலும் நிறுத்தப்படும் மின்சாரம் ஒரு மணி நேரம், சில சமயங்களில் இரண்டு மணி நேரம் கூட வருவதில்லை என்று குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
இதனால் மண்ணச்சநல்லூர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் மேலும் சிறு குறு வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்ணச்சநல்லூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
