மதுரம் மைதானமே போதும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை !

0

கொரோனா இரண்டாவது அலை காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் சில்லறை வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் காந்தி மார்க்கெட் முழுக்க அடைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது சில்லறை வியாபாரத்திற்காக ஜி கார்னர் மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் ஜி கார்னர் மைதானம் பைபாஸில் அமைந்திருப்பதாலும், கூடுதல் தொலைவு காணப்படுவதாலும் மக்கள் வருவதில்லை என்று கூறி காந்தி மார்க்கெட் சிறு குறு வியாபாரிகள் மற்றும் சில்லறை காய்கறி கடைகளை கீழப்புலிவார் ரோட்டில், தாராநல்லூருக்கு அருகே அமைந்துள்ள  மதுரா மைதானத்தில் அமைத்து தரவேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காந்தி மார்க்கெட்டில் உள்ள 10 கேட்டில் ஒரு மட்டுமே திறந்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது, என்றும் எனவே லோடு எடுத்து வரும் பொழுது மட்டும் மற்ற கதவுகளையும் திறந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.