விபத்தில் உயிரிழந்த ஆதரவற்ற பெண்ணை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

0

மனநலம் சரியில்லாத அனாதை பெண் விபத்தில் உயிரிழப்பு நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

food

திருச்சி ஏப்15. 31-3-2021 ஆம் தேதி வேப்பூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த ராயர் (வயது 47/2021) த/பெ முனியன் வடக்குத்தெரு, கிளியூர், உளுந்தூர்பேட்டை தாலுகா என்பவரை காவலர் விசாரித்து பெற்ற புகார் வாக்குமூலத்தில், தான் பூ வியாபாரம் செய்து வருவதாகவும் தான் 31-3-2021 ஆம் தேதி விடியற்காலை கிளியூரிலிருந்து காணும் மணிகண்டன் என்பவரும் தொழுதூர் செல்ல இரு சக்கர வண்டியில் தான் பின்னால் உட்கார்ந்து விட மணிகண்டன் என்பவர் வண்டியை ஓட்ட தொண்டாங்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் காலை நான்கு முப்பது மணிக்கு பைபாஸ் ரோடு ராயல் ஹோட்டல் கடை முன்பு வரும்போது ஒரு மனநலம் சரியில்லாத பெயர் விலாசம் தெரியாத நபர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி திடீரென குறுக்கே வந்து விட்டதாகவும் தான் சென்ற இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற மணிகண்டன் அதிவேகமாக ஓட்டிச் சென்று பெயர் விலாசம் தெரியாத மனநலம் சரியில்லாத பெண்ணின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி அதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டும் மணிகண்டன் என்பவருக்கு இடதுகை அடிப்பட்டும் பல் உடைந்தும் முகம் மற்றும் பல இடங்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு காயம் பட்டவர்களை 108 அவசர ஊர்தி மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சையில் சேர்த்தனர்.

சிகிச்சையில் இருக்கும்போது வேப்பூர் உதவி ஆய்வாளர் விபத்து சம்பந்தமாக வழக்கு பதிவு செய்தார். மேற்படி வழக்கில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த பெயர் அடையாளம் தெரியாத மேற்படி பெண் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்து 31- 3- 2021ஆம் தேதி தகவலின்பேரில் வழக்கின் பிரிவை மாற்றம் செய்து15-4-2021 தேதி புலன்விசாரணைக்கு எடுத்துகொண்டு திருச்சி அரசு மருத்துவமனை சென்று சவக்கிடங்கின் வெளியே வைத்து மேற்படி அடையாளம் தெரியாத பெண்ணின் பிரேதத்தின் மீது சாட்சிகள் மற்றும் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் 11 மணி முதல் 12 மணி வரை பிரேத விசாரணை செய்து சாட்சிகளை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தும் பஞ்சாயத்தார்களின் ஒருமித்த கருத்து பெற்று இறப்பின் உண்மையான காரணத்தை அறியும் பொருட்டு பிரேதத்தை பிரேத பரிசோதனை உட்படுத்தப்பட்டது. அப் பிரேதத்தை வேப்பூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சௌந்தரராஜன் என்பவர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வேப்பூர் காவல் நிலைய முதல்நிலை காவலர் சௌந்தரராஜன் உடன் சவக்கிடங்கில் இருந்து விபத்தில் உயிரிழந்த பெண் பிரேதத்தை பெற்றுக்கொண்டு திருச்சிராப்பள்ளி அண்ணா நகர் உழவர் சந்தை குமிலிக்கரை மயானத்தில் காவலர்கள் முன்னிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி நல்லடக்கம் செய்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.