திருச்சியில் 1.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி ; தயார் நிலையில் அரசு மருத்துவமனை !

0

திருச்சி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு என்று 450 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதோடு, கூடுதல் எண்ணிக்கைகளை எதிர்கொள்ளவும் தயாரான ஏற்பாடு திருச்சி அரசு மருத்துவமனை உள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி கூறினார்.

மேலும் திருச்சி மாநகரில் இரண்டு சிறப்பு மையமும் செயல்பட்டு வருவதாகவும், மொத்தம் 91 ஆயிரம் பேர் களப்பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சந்தா 2

இதைத்தொடர்ந்து கோவிஷுல்டு, கோவாக்சின் 2 தடுப்பூசிகள் ஒரு வாரத்திற்குத் தேவையான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தேவைப்பட்டால் மத்திய தொகுப்பில் உடனடியாக கேட்டு பெறும் ஏற்பாடும் உள்ளதாகவும் கூறினார்.

‌சந்தா 1

மேலும் இதுவரை திருச்சி மாவட்டத்தில் மட்டும் 1.41 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.