திருச்சி பகுதியில் நேற்று(12ம் தேதி) திடீர் மழை

0

திருச்சியில் 12ம் தேதி காலை சுமார் 7 மணியளவில் திருச்சி மாநகரில் திடீரென வானத்தில் கருமேகம் சூழ்ந்தது.

சிறிது நேரத்தில் எதிர்பாராத வகையில் மழை பெய்ய தொடங்கியது. இதனால், நீண்டநாட்களாக அதிக பட்சமாக 107 டிகிரி வரை வெயில் அளவு திருச்சியில் பதிவானது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களும் பலர் வெளியில் தலைகாட்ட முடியாமல் முடங்கி இருந்த நிலையில், இந்த மழை பொழிவு அவர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தந்தது. வெப்பம் கொஞ்சம் தணிந்தது.

food

இதுபோலவே தா.பேட்டையிலும் மழைபொய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

.நீண்ட நாட்களுக்கு பின் குளிர்ந்த காற்று வீசியது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 7.50 மில்லி மீட்டரும், திருச்சி டவுன் பகுதியில் 4 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மழை பொழிவால் நேற்று 91.6 டிகிரி அளவிலே வெயில் அளவு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.