வரும் 20ம் தேதி சமயபுரம்(கொரோனா கட்டுப்பாடுகளுடன்) தேர்த்திருவிழா

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

0

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் முதன்மையானது நமது சமயபுரம். சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு  கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா நடைபெற அரசு அனுமதித்து உள்ளது. அதனால் கடந்த 12ம் தேதி சமயபுரம் மாரியம்மன் 7.45 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் எழுந்தருளினார். கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து 8 மணிக்கு மாரியம்மன் படம் வரையப்பட்ட கொடியை கோவில் குருக்கள் கொடிமரத்தில் ஏற்றினர். இதில் கோவில் இணைஆணையர் கல்யாணி, மேலாளர் லட்சுமணன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

food

வருகிற 19-ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றிவந்து அபிஷேகம் மண்டபத்தை சென்றடைகிறார். இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும், வருகிற 21-ந்தேதி அம்மன் வசந்தமண்டபத்தில் இருந்து வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 23-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. 27-ந்தேதி இரவு அம்மன் வசந்தமண்டபத்தில் இருந்து தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.

இந்த ஆண்டும் திருவிழா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.