திருச்சி அருகே சாலை விபத்து : ஒருவர் பலி

0

கடந்த 11ம் தேதி இரவு புள்ளம்பாடியில் வசிக்கும் மருதுபாண்டி (வயது 19).  இவரது தந்தையுடன் சிறுகளப்பூரில் இருந்து புள்ளம்பாடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

food

வரகுப்பை  பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (23), கிழக்குத் தெருவைச் சேர்ந்த செந்தில்முருகன் (20) இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துகொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக இருமோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டதில் மருதுபாண்டி, பிரசாந்த், செந்தில்முருகன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே மருதுபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் தொடர்சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து சிறுகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.