போலீசாரின் மெத்தன போக்கு-விவசாயி திருச்சி கலெக்டரிடம் மனு
திருச்சி, லால்குடி வாளாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (53). விவசாயியான இவர் 12ம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு தலையில் அரிவாள் வெட்டு காயத்திற்கு பேண்டேஜ் போட்டுக்கொண்டு தனது குடும்பத்துடன் வந்து. கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில், . எனது தாயார் மருதம்மாள் இறந்த 30-வது தினம் அனுசரிக்கப்பட்டு கடந்த 7-ந்தேதி வீட்டில் பூஜை செய்து கொண்டிருக்கையில், வீட்டிற்குள் புகுந்த, கல்கண்டார் கோட்டை, செம்பழனி கிராமத்தை சேர்ந்த 6 பேர் கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி என்னை மண்டையில் அரிவாளால் வெட்டியதுடன், எனது மைத்துனர் கருணாகரனையும் தாக்கினர்.
இதுகுறித்து சமயபுரம் போலீசில் புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்யும்படி குறிப்பிட்டிருந்தார்.