திருச்சி ஆட்சியர் அலுவலக முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

உர விலை உயர்வு

0

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 12ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் என்ன என விசாரித்தார்.

அப்போது விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரு மடங்கு லாபம் தருவோம்  என சொன்ன அரசு  தராமல் உர மூட்டை விலையை மட்டும் இருமடங்கு உயர்த்தி விட்டது. ரூ.1,200-க்கு விற்ற உரமூட்டை இன்று கடையில் ரூ.2,400-க்கு விற்கிறார்கள்.  விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்றார்கள். ஆனால் பாதி நேரம்தான் மின்சாரம் இருக்கிறது.  நாங்கள் வாழ்வதா? சாவதா? என்ற நிலையில் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து ஒப்பாரி போராட்டமும் நடத்தினர்.

சந்தா 2

அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குனரின் காரின் முன், விவசாயிகள் சிலர் படுத்தவாறு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

‌சந்தா 1

பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் திவ்யதர்சினி அவர்களது மனுவை ஏற்றுக்கொண்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.