திருச்சியருகே தேர்தல் முடிவு .குறித்து இரு கட்சியினரிடையே வாக்குவாதம்-வழக்கு பதிவு
கடந்த 11ம் தேதி கட்சியினருடன் தனது வீட்டருகே அவர், நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், வெற்றிவாய்ப்பு குறித்தும் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரான ஆதாளி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே தனது ஆதரவாளர்களுடன் சென்ற தி.மு.க. பிரமுகர் வெற்றிச்செல்வனுடன் தேர்தல் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாற, தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருதரப்பினரிடையே சமரசம் செய்தனர்.
பின்னர், இரு தரப்பிலும் கொடுத்த புகாரின்பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஆதாளி உள்ளிட்ட10 பேர் மீதும், தி.மு.க.வை சேர்ந்த வெற்றிச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.