திருச்சியிலிருந்து ஷார்ஜா செல்லும் விமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து : பயணிகள் அவதி

0

திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 12ம்  தேதி இரவு 9.45 மணிக்கு திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்படுவதாக இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு,.  அதனை சரி செய்யும் பணியில்தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் 116 பேர், விமான நிறுவனத்தின் சார்பில் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

food

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டவுடன் 13ம் தேதி இரவு 9.45 மணிக்கு விமானம் புறப்படும் என்று விமான நிலையத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் துபாயில் இருந்து திருச்சிக்கு 12ம் தேதி 7.30 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்துசெய்யப்பட்டது. அந்த விமானம் 13ம்தேதி காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும் என்றும், அந்த விமானம் மீண்டும் 13ம்தேதி மாலை 4.15 மணிக்கு ஷார்ஜா நோக்கி புறப்பட்டுச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 

 

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.