அரக்கோணம் இரட்டை படுகொலையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

0

அரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டும், படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் பாரபட்சமில்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழக அரசை வலியுறுத்தி, திருச்சி மாநகர் மாவட்ட TOPM – AIYF – AISF ஆகிய அமைப்புகளின் சார்பில் 12.04.2021 மாலை 05.30 மணியளவில், உறையூர் குறத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் TOPM மாவட்ட பொறுப்பாளர் S.சூர்யா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு AIYF மாவட்ட செயலாளர் வுழக்கறிஞர் M.செல்வகுமார், AISF மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர்  த.இந்திரஜித், AITUC மாவட்ட பொதுச் செயலாளர்  க.சுரேஷ், CPI மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் S.சிவா

food

மற்றும் AISF மாநில துணை செயலாளர் G.R.தினேஷ் குமார், AIYF மாவட்ட தலைவர் R.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்ட பொருளாளர் K.K.முருகேசன், AIYF மாவட்ட துணை செயலாளர் A.சுதாகர், AISF மாவட்ட துணை செயலாளர் கௌதம், AISF மாவட்ட பொருளாளர் பாட்ஷா உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் AIYF மாவட்ட குழு உறுப்பினர் R. சரன்சிங் நன்றியுரை கூறினார்..

gif 4

Leave A Reply

Your email address will not be published.