கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ; மாணவர் கொலை !
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த ஈரோடை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் குமார் நண்பர்களோடு இணைந்து திருவிழாவில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் குமார் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கிரன் என்பவருக்கும் மற்றொருவருக்கும் திருவிழாவில் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் தாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சண்டையில் தன்னோடு ஈடுபட்டது குமார் என்று எண்ணிய கிரண், தனது நண்பர்களோடு இணைந்து குமாரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கில் கிரண், சூர்யா, நந்தகுமார், விக்னேஷ், கிருபா, தமிழ், பூபேஸ் ஆகியோரை குமாரை கொன்ற வழக்கில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.