முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் நிச்சயம் ; அதிரடி காட்டிய திருச்சி காவல்துறை !

0

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகர், புறநகர் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி மாவட்ட காவல் துறையினர் முகக் கவசம் அணிய வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முக கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது இரண்டு நாட்களில் வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர்.

திருச்சி மாநகர் பகுதியில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன, மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 568 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் திருச்சி புறநகர் பகுதிகளில் சோதனைச்சாவடிகள், பேருந்துகள் நிற்கும் இடம், மக்கள் கூடும் இடங்களில் காவல் ஆய்வாளர் தலைமையில் அதிரடி ஆய்வு நடத்தி முகக் கவசம் அணியாத ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது புறநகர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர் மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.