திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் கேன்சல் !

0

திருச்சி விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஓமன், மஸ்கட் போன்ற நாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியாவின் உள்நாட்டு சேவைகளாக மும்பை, புதுடெல்லி, ஹைதராபாத், கொச்சி, பெங்களூர், சென்னை போன்ற பகுதிகளுக்கும் விமான சேவை திருச்சியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இன்று வரை விமான சேவைகள் முன்பைப் போல் சரியாக இயக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக பெரும்பான்மையான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

food

கோடை கால அட்டவணையின் படி திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானங்களாக சென்னை மற்றும் பெங்களூரில் செல்லும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூருக்கு காலையில் இயக்கப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதனால் விமானப் பயணிகள் பெரிதும் துன்பம் அடைவதாகக் கூறுகின்றனர். இதனால் உள்நாட்டு விமானங்களை மீண்டும் சரிவர இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.