சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும், தீர்மானம் நிறைவேற்றம் !

0

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம், கூட்டமைப்பின் தலைவர் ரவி தலைமையில் திருச்சி, உறையூர், கைத்தறி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 11. 4.2021 நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து 32 சுங்கச்சாவடிகளின் பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் காரல் மார்க்ஸ், நிர்வாகிகள் சமயபுரம் அற்புதம், விக்கிரவாண்டி ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோரும் மற்றும் திருச்சி மாவட்ட ஏஐடியூசி பொதுச்செயலாளர் சுரேஷ், திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராம்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

food

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, 10 முதல் 20 ஆண்டுகள் பணி புரியும் சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். இ.எஸ்.ஐ, பி.எஃப் திட்டங்களை சங்கப் பணியாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.

தானியங்கி வசூல் முறை அமல்படுத்தப் பட்டாலும் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ய கூடாது. போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

gif 4

Leave A Reply

Your email address will not be published.