பைக் திருடர்கள் 8 பேர் கைது ; கொலை வழக்கிலும் தொடர்பு !

0

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நம்பர் இல்லாமல் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில் வந்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூற சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பாலக்கரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தது விசாரிக்கத் இருக்கின்றனர்.

food

இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பெயராக கூறி தப்பிக்க முயன்று உள்ளனர். பிறகு காவல்துறையினர் அவர்கள் கூறி 8 பேரையும் அழைத்து விசாரித்ததில் அவர்கள் திருச்சி பாலக்கரை பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதும், மேலும் பல பைகளை திருடியதும் தெரிய வந்து உள்ளது.
மேலும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில் நான்கு பேர் ஆறு மாதங்களுக்கு முன்பு சங்கிலியாண்டபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி என்ற மூதாட்டியை கழுத்தை நெரித்து நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது.

இதனால் பாலக்கரை காவல்துறையினர் அனைவரிடமும் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.