மாஸ்க் அணியாதவர்களை ஒருமையில் கூறியதாக எஸ்.ஐ-யிடம் வாக்குவாதம் !

0

திருச்சி பொன் நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகன ஓட்டிகள், மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மாஸ்க் அணியாமல் வருவதாக கூறி வாகனங்களை நிறுத்தி எச்சரித்து உள்ளனர்.

சந்தா 2

அப்போது எஸ்.ஐ. கிஷார்குமார் மாஸ்க் அணியாதவர்களை ஒருமை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த வாகன ஓட்டிகள் எஸ்.ஐ.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மற்றொரு எஸ்.ஐ. எழில் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.