காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரக் கடைகளுக்கு நாளை முதல் தடை !

0
gif 1

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தளர்வுளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்திருக்கிறது.

gif 4

இதில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சில்லறை மார்க்கெட்டுகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நாளை முதல் திருச்சி காந்தி மார்க்கெட் சில்லரை காய்கறி விற்பனையகம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் காந்தி மார்க்கெட்டில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மொத்த வியாபாரமும் பிறகு காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறு மொத்த வியாபாரம் அதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மார்க்கெட் பகுதியில் தூய்மை பணி மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் பூ மற்றும் மளிகை கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்றும் காந்தி மார்க்கெட் வியாபாரி சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

gif 2

Leave A Reply

Your email address will not be published.