தெருவோர நாய்களுக்கு குடிநீர், உணவு வழங்கி வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

0

 தெருவோர நாய்களுக்கு குடிநீர், உணவு வழங்கி வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

காலநிலை மாற்றத்தால் கோடைக்கால வெப்பம் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாக்கத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது. வெயிலின் தாக்கம் கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தமுறை அதிகமாக உள்ளது. மனிதர்களால் தாங்க முடியாத வெயிலின் தாக்கம் பறவைகள், தெருவோரபிராணிகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது.

இதனை கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புத்தூர் பகுதியில் பறவைகள் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டியினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ராவிஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் தெருவோரநாய்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். சிறிய உயரம் கொண்ட பெரிய சிமெண்ட் தொட்டியில் நீர் வைக்கும்போது அது குளிர்ச்சியாக இருக்கும். தெருவோரநாய்கள் குளித்து உடல் சூட்டைத் தனித்துக்கொள்ளவும் பயனுள்ளதாக உள்ளது.

கோடைகாலங்களில் வெப்பம் உச்சத்தில் இருக்கும் போதும் பிராணிகளின் குணாதிசயங்கள் மாறுபடும். இதனால் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும். தெருவோர பிராணிகளுக்கு உணவு கிடைக்காத போது பொதுமக்கள் வாங்கி செல்லும் உணவு பொருட்களை உண்ணவும் வரும். பொதுவாக மனிதர்கள், மனிதர்களிடம் மட்டுமே பாசமும், அக்கறையும் காட்டுகிறார்கள். நாம் பசிக்கிறது என்றால் வாய்விட்டுக் கேட்கிறோம். ஆனால், வாயில்லா ஜீவன்களால் அப்படி கேட்க முடியாது. பசியை தாங்கவும் அவைகளால் முடியாது. அதனாலே தெருவோர பிராணிகள் உணவிற்காக நகர்புறங்கள்ல் வீட்டிற்கு வீடு வந்து நிற்கும் நிலையையும் காண இயலும்.

வசதியுள்ளவர்கள் உள்நாட்டு பிராணிகளிடம் பாசம் காட்டுவதை கவுரவக் குறைச்சலாக கருதுகின்றனர். அதனாலே பராமரிப்பின்றி உள்நாட்டு பிராணிகள் தெருவோரம் இருப்பதை காண இயலுகிறது. பலர் வெளிநாட்டு செல்லப் பிராணிகளை வளர்ப்பதும், பராமரிப்பதையும் அந்தஸ்தாக கருதுகிறார்கள். அப்பராமரிப்பிற்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் செலவிடுவதும் உண்டு.

food

அதே நேரம் நமது சீதோஷ்ண நிலைக்கு உகந்த உள்நாட்டு பிராணிகளிடமும் பாசத்தைக் காட்டிப்பாருங்கள். வாழ்க்கை மிகவும் அழகாகும்.‌தெருவோர பிராணிகளான ஆடு,மாடு, பூனை, நாய்களுக்கு சாப்பாடு கொடுக்க ஒரு தொகை செலவழித்து வருகின்றனர்.அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர். 

நாள்தோறும் தெருவோர பிராணிகளான ஆடு, மாடு, பூனை, தெரு நாய்களுக்கும், காக்கை, குருவிகளுக்கும் உணவு வழங்கியும், குடிநீர் வைத்தும் பராமரித்தும் வருகிறார்கள்.

யோகா ஆசிரியர் விஜயகுமார்

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை

திருச்சிராப்பள்ளி

9842412247

gif 4

Leave A Reply

Your email address will not be published.