கொரோனா தடுப்பூசி போட சட்டமியற்ற வேண்டும் !

முசிறி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் முசிறி அரசு ஆண்கள் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார், மேலும் பரமசிவம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உடல் தகுதி உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
