ஓட்டைப் பறி கொடுத்த வாலிபர் ; 2 ஓட்டு போட்ட மூதாட்டி !

0
1

திருச்சி மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குறத்தெரு அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த ஹரிஹரன் என்ற நபர் வந்திருந்தார். அப்போது ஹரிஹரனுக்கு முன்பாக மூதாட்டி ஒருவர் வாக்களித்தார், அவருக்கு சத்தம் வரவில்லை என்பதற்காக அங்கேயே அதிகாரிகள் சில வினாடி மூதாட்டியை நிற்கச் சொல்லி இருக்கின்றனர்.

இந்தநிலையில் சத்தமும் வந்திருக்கிறது. இது அறியாத மூதாட்டி மீண்டும் பட்டனை அழுத்தி மூதாட்டிக்கு பின் வாக்களிக்க இருந்தவரின் வாக்கையும் போட்டு விட்டுச் சென்றுவிட்டார். இதனால் அந்த இளைஞர் ஓட்டு போட முடியவில்லை.

ஹரிஹரன் அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உங்களுடைய வாக்கு அழிக்கப்பட்டு விட்டதாக கூறி ஹரிஹரனை தேர்தல் அலுவலர்கள் வெளியேற்றினர்.

2

இறுதியில் இரண்டு ஓட்டை போட்ட மூதாட்டியும் சென்றுவிட்டார். ஓட்டுப் போடாமல் வாக்குச்சாவடியில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் இளைஞர் ஹரிஹரன்.

3

Leave A Reply

Your email address will not be published.