வாக்குப்பதிவு இயந்திரமும், திருச்சி மாவட்டத்தின் வாக்கு எண்ணும் மையமும் !

0

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் பலத்த போலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு காலை வரை கொண்டு வரப்பட்டன.

இவ்வாறு திருச்சியில் சாரநாதன் பொறியியல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, துறையூர் இமயம் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகள் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி செய்யப் பட்டிருக்கிறது.

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவரம்பூர் ஆகிய ஆகிய தொகுதிகளில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

துறையூர் இமயம் கல்லூரியில் துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப் பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ராமகிருஷ்ணா லால்குடி பொறியியல் கல்லூரியில் லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

9 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3,292 வாக்குச்சாவடி பெட்டிகள் மையங்களில் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.