ஓட்டுக்கு பணம் தரவில்லை, வாக்குச்சாவடி முற்றுகை ; திருச்சியில் பரபரப்பு !
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயநேரியில் வசிக்கும் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகளும், தேர்தல் அதிகாரிகளும், மக்களிடம் ஓட்டுக்கு பணம் பெறுவது குற்றம் என கூறி மக்களுக்கு தகவல்களை எடுத்துரைத்தனர்.
ஆனாலும் போராட்டம் சிறிது நேரம் தொடர்ந்தது, பிறகு ஒருவழியாக அதிகாரிகள் மகளை சமாதானப்படுத்தியதன் அடிபடையில் மதியத்திற்கு பிறகு ஒவ்வொருவராக வந்து வாக்கு அளித்து சென்றனர்.