திருச்சி தொட்டியத்தில் பிளஸ் – 2 மாணவர் குத்திக்கொலை

0
1

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மகன் குமார் (வயது 18). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவுக்காக கடந்த வாரம் அவர் வீட்டுக்கு வந்திருந்தார்.

 

03.04.2021இரவு திருவிழாவையொட்டி வாணப்பட்டறையில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதை பார்க்க குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் வாணப்பட்டறை அருகே தெற்கு ரதவீதியில் குமாரை மர்ம கும்பல் கத்தியால் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

 

2

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். குமாரை எதற்காக அந்த கும்பல் கொலை செய்தது என்று தெரியவில்லை.

 

4

இதைத்தொடர்ந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரை எதற்காக அந்த கும்பல் கொலை செய்தது?, முன்விரோதமா? அல்லது காதல் தகராறா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்