திருச்சியில் ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று உறுதி – ஸ்ரீரங்கத்தில் தடைசெய்யப்பட்ட பகுதி !

0
D1

திருச்சியில் ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று உறுதி – ஸ்ரீரங்கத்தில் தடைசெய்யப்பட்ட பகுதி !

 

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,094 ஆக அதிகரித்துள்ளது. ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் தெருவில் உள்ள சன் பில்டர்ஸ் தனராஜ் காம்பளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 37 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் கொரோனா 14 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

N2

இதனை தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பிரதான வாசல் மூடப்பட்டு உள்ளது. சவுக்கு கட்டைகளால் அதனை மூடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேநேரத்தில் குடியிருப்பின் பக்கவாட்டு வாசல் வழியாக உள்ளே சென்று வர வசதி உள்ளது. 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அந்த பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

 

D2

இதுதவிர ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு ஓட்டல், ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவையும் மூடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

N3

Leave A Reply

Your email address will not be published.