திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

0

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வாக்காளர் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வாக்காளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் அளிக்க ஊழியர்கள் அமர்ந்தப்பட்டுள்ளனர். இது தவிர வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு கைகளில் கிருமிநாசினி திரவம் தெளிக்க பிரத்யேக ஊழியர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் தேர்தலின்போது ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் மற்றும் வெளிமாநில போலீசார், துணை ராணுவப்படையினர், ஊர்க்காவல் படையினர், ஆயுதப்படை போலீசாருக்கு பணி ஒதுக்கீடு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 4ம் தேதி நடந்தது.இதில் தேர்தல் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள், எத்தனை மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும். பணிக்கு செல்லும்போது எந்தெந்த பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட உள்ள வாகனங்களுக்கான ஆவணங்கள் சரிப்பார்ப்பு 2-வது நாளாக நேற்றும் நடந்தது. இதற்காக 100-க்கணக்கான வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Leave A Reply

Your email address will not be published.