தண்டனை பெற்றவர்கள் தான் அதிமுக காரர்கள் ; திமுக வேட்பாளர் காட்டம் !

0

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே என் நேருவுக்கு ஆதரவாக ஒவ்வொரு வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இறுதியாக கே என் நேரு பீமநகர், சுடலை மாரியம்மன் கோவில் மைதானம் அருகே பேசினார்.

அப்போது திமுகவினரை பற்றி இன்று நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டு இருக்கிறது அதிமுக, ஆனால் திமுகவினர் மீது குற்றம் சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை, அதிமுகவினர் மற்றும் அதிமுகவின் பொதுசெயலாளரே தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது என்று கடுமையாக சாடினார்.

‌சந்தா 1

கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று தொகுதி முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி பேசி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்ற தேர்தலிலேயே மலைக்கோட்டை ரோப்கார் அமைத்துத் தருகிறேன் என்று வெல்லமண்டி சொன்னார். ஆனால் தற்போது அவருக்கு சொந்தமாக கார் வாங்கி விட்டுக் கொண்டிருக்கிறார், இன்றுவரை ரோப்காரை பற்றி வாய் திறக்கவில்லை என்று விமர்சித்தார்.

சந்தா 2

திருச்சி திருவரம்பூர் வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திருச்சி சிவா எம்பி பேசினார். அப்போது திமுக ஆட்சி அமைத்தவுடன் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்படும். மேலும் வரிவசூல் திமுக ஆட்சியில் மலரிலிருந்து தேன் எடுப்பது போல இருக்கும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

துறையூர் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தொகுதியை மேலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவதாக கூறி வாக்கு சேகரித்தார்.

லால்குடி தொகுதி திமுக சௌந்தரபாண்டியன். லால்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, அதிநவீன கட்டமைப்புகளை ஏற்படுத்துவோன் என்று பொதுமக்களிடம் வாக்குறுதியளித்தார்.

மணப்பாறை திமுக கூட்டணி வேட்பாளர் அப்துல் சமத் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மணபாறையில் அரசு கலைக் கல்லூரியை கண்டிப்பாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் மணப்பாறையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுவேன் என்று கூறினார்.

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் பழனியாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் முழுக்க பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் பூக்களின் விற்பனையை மேம்படுத்தவும் , பாதுகாக்கவும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.