ஏழை மூதாட்டி பிணத்தை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

0
D1
ஏழை, எளிய மூதாட்டி பிணத்தை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்
N2
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் வாழ்ந்து வருகிறார்கள்.பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்து விடுகிறார்கள்.
முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும் சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். இவ்வாறு பிறரிடம் யாசகம் கேட்டு சுற்றித்திரிந்து பொன்மலை மாரியம்மன் திருக்கோவில் அருகே ஜுவனம் நடத்தி வந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மூக்காயி பொன்மலை மாரியம்மன் கோவில் அருகே 4 – 4 -2021 அன்று இறந்துவிட்டார். இறந்தவர் குறித்து விசாரிக்கையில், பொன்மலை காவல்துறையினர் இறந்தவரின் புகைப்படத்தை காட்டி இறந்த நபரை பற்றி விசாரிக்கையில், மூக்காயி மகள் திருச்சி, பாலக்கரை, எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு,க/பெ லேட் ராஜன் அவரின் மனைவி லட்சுமி வயது 60 உள்ளார் என தெரியவந்தது
மூக்காயி மகளுக்கு திருமணமாகி சுமார் முப்பத்தைந்து வருடங்கள் இருக்கும் கணவர் ராஜன் இறந்துவிட்டார். மாரியம்மாள் ஆனந்தி என இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் திருமணம் புரிந்து இறந்துவிட்டார். இரண்டாவது மகள் விஜய் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவரது அம்மா மூக்காயி பொன்மலை பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் தங்கி பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி வந்துள்ளார். மேற்கண்ட தகவலை மூக்காயி மகள் லட்சுமிக்கு தெரியப் படுத்தப்பட்டு நேரில் வந்து பார்த்த லஷ்மி மூக்காயி வாயில் மூக்கில் ரத்தம் வந்து இறந்து கிடப்பதை அறிந்தார். மேலும் வேறு எங்கும் காயங்கள் இல்லை இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என பொன்மலை காவல் நிலையத்தில் லஷ்மி கூறியுள்ளார்.
எனவே மேற்படி இறந்தவரின் இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என விசாரணையில் தெரிய வருகிறது. அவரை ஆதரிக்க யாரும் இல்லாத நிலையில் உடல் நலம் குன்றி இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது. மேற்படி நபர் ஏழை எளியவர் என்பதாலும் அவரது மகள் லட்சுமி மூக்காயி பிரேதத்தை நல்லடக்கம் செய்ய உதவி கோருகிறார் என்பதை திருச்சிராப்பள்ளி பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாருக்கு 4-4–2021 அன்று தகவல் அளித்ததன் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , ஸ்வேதா, கீர்த்தனா உள்ளிட்டோர் பிரேதத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவலர் சீனிவாசன் உடன் மூக்காயி மகள் லஷ்மி உள்ளிட்டோருடன் திருச்சிராப்பள்ளி தென்னூர் அண்ணா நகர் குலிமிகரை மயானத்தில் 4-4-2021 அன்று நல்லடக்கம் செய்தனர்.
நல்லடக்க நிகழ்வில் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்,சந்தோஷ், கீர்த்தனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் வருடம் முழுவதும் உண்ண உணவும் உடுத்த உடையும் வழங்கி வருகிறார்கள். மேலும் தெருவோர நாய்களுக்கும் பிற ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அனாதைப் பிணங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட புகைப்படம் ஒளி ஒலிப் பதிவுகளை ஆவணமாக பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது.
அனாதை பிணங்கள் நல்லடக்க உதவிக்கு
யோகா ஆசிரியர் விஜயகுமார்
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை புத்தூர் திருச்சி 17.
செல் 98424 12247
N3

Leave A Reply

Your email address will not be published.