திருச்சியில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல்

0

திருவெறும்பூர் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கம்பன் தலைமையிலான பறக்கும்படையினர் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் எம்.ஐ.டி. அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவெறுபூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த காரை சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டு,. காரில் வந்த புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலை சேர்ந்த நீதிராஜனிடம் ( 55) விசாரணை நடத்திய போது  பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.

அதனால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை திருவெறும்பூர் தாசில்தார் செல்வகனேசனிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.