பொதுத்துறையை பாதுகாப்பது அதிமுக அரசு ; திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் !

0
1

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18வது வார்டில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழக அரசின் சாதனை மீண்டும் கிடைத்திட மீண்டும் ஒருமுறை அதிமுகவை வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் கார்த்திகேயன், அவைத்தலைவர் ஐயப்பன், சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் கம்பரசம்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெட்டவாய்தலையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

திருவரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் தொழிற்சங்கத்தினர் இடம் வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக அரசு பொதுத் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வருகிறது. பொதுத்துறையை பாதுகாக்க அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

2

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாபன் 59 வது வார்டு பகுதி நாச்சியார்கோயில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகள் மேற்குத் தொகுதியில் விரைவில் சரி செய்யப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.