திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த, பாலியல் வன்முறை செய்த இருவர் போக்சோவில் கைது

0

ஜெயங்கொண்டம் ,சிறுகடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் குமாருக்கும்(24), 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020 ல் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் வசித்து வந்த வீட்டின் அருகே இருந்த செளந்தரராஜன் (24) அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சந்தா 2

இதுகுறித்து சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் சிறுமியை திருமணம் செய்த ரஞ்சித் குமார் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த செளந்தரராஜன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.