தொகுதி முழுக்க அனல் பறக்கும் பிரச்சாரம் ; திமுக வேட்பாளர்கள் பிரச்சார ஸ்டேட்டஸ் !

0

மேற்கு தொகுதி வேட்பாளர் கே என் நேரு விற்கு ஆதரவாக கே என் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் வாக்கு சேகரித்தார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், மீண்டும் வாய்ப்புத் தாருங்கள் என்று வலியுறுத்தியும் கே என் நேரு வுக்கு ஆதரவாக நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் நகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூர் பகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர். அப்போது மாடுபிடி வீரர்களிடம் திமுக ஆட்சியில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு பெரிய அளவில் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் மலர்கள் தூவியும், பலூன்களை பறக்கவிட்டும், புறாக்களை பறக்க விட்டு தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார்.

‌சந்தா 1
சந்தா 2

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ சுப்பிரமணியபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக அந்த பகுதி மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளர் துருவம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் தமிழகத்தில் விடமாட்டோம். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை விவசாயிகள் முன் முன்வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.