திருச்சி அதிமுக வேட்பாளர்களின் பிரச்சார சுற்றுப்பயணம் !

0
1

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாபன் தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதல்வர் ஜெயலலிதா வழியில் தமிழகத்தை ஆள மீண்டும் இரட்டை இலைக்கு வாய்ப்புத் தாருங்கள் என்று கேட்டு வாக்கு சேகரித்தார். உடன் அதிமுக, பாஜக, பாமக கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் கே.கே நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் நடராஜன், திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் அதிமுக மின் பற்றாக்குறை இல்ல மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது என்று கூறி வாக்கு சேகரித்தார்.

2

அதிமுகவின் மணப்பாறை வேட்பாளர் சந்திரசேகர் மருங்காபுரி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பேசிய சந்திரசேகர், மணப்பாறை தொகுதியில் அரசு கல்லூரிக்கான அரசாணை தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

திருவரம்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் சின்ன சூரியூர், பெரிய சூரியூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய குமார் மகளிர் சுய உதவி குழு கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். திருவெரம்பூர் தொகுதியில் அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் என்று பலர் பங்கேற்றனர்.

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அந்தநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கணேசன், பாஜகவைச் சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.