திருவெறும்பூர் பகுதியில் புதிய தலைமுறை இளைஞர் கட்சி வேட்பாளர் சக்திவேல் தீவிர தேர்தல் பிரச்சாரம்

திருவெறும்பூர் பகுதியில் புதிய தலைமுறை இளைஞர் கட்சி வேட்பாளர் சக்திவேல் தீவிர தேர்தல் பிரச்சாரம்
திருவெறும்பூர் ஏப்ரல் 2 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் புதிய தலைமுறை இளைஞர் கட்சி வேட்பாளர் எஸ் சக்திவேல் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் இதுபற்றிய விவரம் வருமாறு 6ஆம் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு 15 பேர் வரை போட்டியிடுகின்றனர்.இதில் புதிய தலைமுறை இளைஞர் கட்சி சார்பில் என்ஜினீயர் எஸ் சக்திவேல் போட்டியிடுகின்றார். இவர் பெல் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருச்சி தஞ்சை சாலையில் சர்வீஸ் ரோடு வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வரும் போராளி ஆவார். பிரபலமான பல அரசியல் கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் அதனைப் பற்றி ஒரு துளியும் இவர் கவலைப்படாமல் களத்தில் இறங்கி கடந்த காலங்களில் மக்களுக்காகத் தான் ஆற்றிய பல்வேறு சமூக பணிகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் நேற்றைய முன்தினம் துப்பாக்கி தொழிற்சாலை எச்இ பிஎஃப் தொழிற்சாலை பக்தவத்சலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார் நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் எல்லக் குடி விரிவாக்கம் பகுதிகளான பிரகாஷ் நகர் நியூ டவுன் முத்துநகர் ராகவேந்திரா நகர் அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தான் கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் மக்களின் வளர்ச்சிக்காக செய்த பணிகளை பட்டியலிட்டு எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் இவர் மக்களிடம் குறிப்பாக திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோட்டை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து பகுதி மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்றும் ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் நமது அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்றும் உண்மையாக உழைத்து நேர்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பேன் ஆகவே எனக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று உருக்கமாகப் பேசி வாக்கு சேகரித்து வருகிறார் இவருடன் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் நல சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோரும் உடன் சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
